ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை (ஜனவரி 29) கலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். 

Advertisement

இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையன் சில சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 

Advertisement

550 டெஸ்ட் விக்கெட்டுகள்

இந்த தொடரில் நாதன் லையன் 11 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 550ஆவது விக்கெட்டை பூர்த்தி செய்வார். இந்த மைல் கல்லை அவர் எட்டும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதனை நிகழ்த்தும் மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் உலகின் ஏழாவது வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.  இதுவரை ஆஸ்திரேலியாவுக்காக ஷேன் வார்ன் மற்றும் க்ளென் மெக்ராத் மட்டுமே இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளனர். இதுவரை 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நாதன் லையன் 539 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்டுகள்

இது தவிர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் நாதன் லையன் படைக்கவுள்ளார். தற்போது, ​​இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார், அவர் 47 டெஸ்ட் போட்டிகளில் 88 இன்னிங்ஸ்களில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  அதேசமயம் நாதன் லையன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 48 போட்டிகளில் 85 இன்னிங்ஸ்களில் 196 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் பாட் கம்மின்ஸ் இந்தத் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னெமன், மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்ஃபி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News