ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியில் ரஹ்மனுல்லார் குர்பாஸ் 43 ரன்களைச் சேர்த்தாலும் அதனை அடிக்க அதிக பந்துகளை எடுத்துக்கொண்டார். 

Advertisement

மேற்கொண்டு விளையாடிய வீரர்களில் ரஷித் கானைத் தவிர்த்த மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்காத காரணத்தால் ஆஃப்கானிஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து வங்கதேச அணி 11.4 ஓவர்களில் இந்த இலக்கை எட்டினால் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற சூழலில் களமிறங்கியது.

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் மற்றும் தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் இரண்டாவது ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்த பந்திலேயே ஷாகிப் அல் ஹசனும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

இந்நிலையில் இப்போட்டியின் ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் மூன்றாவது ஓவரை வீசிய நவீன் உல் ஹக், அந்த ஓவரின் 4ஆவது பந்தில் நஜ்முல் ஹொசைன் விக்கெட்டையும், அடுத்த பந்திலெ ஷாகிப் அல் ஹசனின் விக்கெட்டியும் கைப்பற்றி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளித்தார். தற்போது நவீன் உல் ஹக் அடுத்தடுத்து பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அதேசமயம் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேற தீவிரமாக போராடிவரும் வங்கதேச அணியானது 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களைச் சேர்த்துள்ளது. மேற்கொண்டு அந்த அணி 2.1 ஓவர்களில் அந்த அணி இலக்கை எட்டும் பட்சத்தில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியில் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News