நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது.  தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி இப்போட்டியில் பேட்டிங்கில் பெரிதளவில் சோபிக்க தவறியது. இதனால் முதல் இன்னிங்ஸில் 45.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ண்டு 162 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஷ் ஹசில்வுட் 5 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷாக்னேவை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவற, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 256 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 86 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

Advertisement

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூசிலாந்து அணியில் வில் யங் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் லேதம் - கேன் வில்லியம்சன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின்னர் 51 ரன்கள் எடுத்த நிலையில் கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்தது.

இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை டாம் லேதம் 65 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 11 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் லேதம் 73 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரச்சினுடன் இணைந்த டேரில் மிட்செலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் 58 ரன்கள் எடுத்த நிலையில் டேரில் மிட்செல் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த ரச்சின் ரவீந்திராவும் 82 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் குகெலீஜ்ன் 44 ரன்களைச் சேர்த்ததை தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இதன்மூலம் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 372 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், நாதன் லையன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 279 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து அணி நிர்ணயித்தது. 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 11 ரன்கள் எடுத்திருந்த உஸ்மான் கவாஜாவும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் க்ரீன் 5 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் இணைந்த டிராவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஷ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இன்று தொடங்ய நான்காம் நாள் ஆட்டத்தை டிராவிஸ் ஹெட் 17 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 27 ரன்களுடனும் தொடர்ந்தனர். 

இதில் டிராவிஸ் ஹெட் 18 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் - அலெக்ஸ் கேரி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் 10 பவுண்டரி, ஒரு சிக்சர் என 80 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க்கும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.

Advertisement

பின்னர் அலெக்ஸ் கேரியுடன் இணைந்த கேப்டன் பாட் கம்மின்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். இதில் அலெக்ஸ் கேரி 98 ரன்களையும், பாட் கம்மின்ஸ் 32 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News