பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 3 டி20 போட்டிகளின் முடிவிலும் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கி டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.  இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சைம் அயுப் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான முகமது ரிஸ்வான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த மறுபக்கம் களமிறங்கிய, நட்சத்திர வீரர் பாபர் அசாம் 19 ரன்களுக்கும், ஃபகர் ஸ்மான் 9 ரன்களுக்கும், சாஹிப்ஸதா ஃபர்ஹான் ஒரு ரன்னிலும், இஃப்திகார் அஹ்மத் 10 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து தனி ஒருவனாக அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வான் 6 பவுண்டரி, 2 சிச்கர்கள் என 90 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய முகமது நவாஸ் 3 சிக்சர்களை விளாசி 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கேட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மேட் ஹென்றி மற்றும் லோக்கி ஃபர்குசன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டிம் செய்ஃபெர்ட் ரன்கள் ஏதுமின்றியும், ஃபின் ஆலன் 8 ரன்களிலும், வில் யங் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டெரில் மிட்செல் - கிளென் பிலீப்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்ததுடன், இருவரும் அரைசதமடித்தும் அசத்தினர்.

தொடர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெரில் மிட்செல் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 72 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 70 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த டேரில் மிட்செல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News