வெஸ்ட் இண்டீஸ் அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன்மூலம் 18 ஆண்டுகளுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் டெஸ் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

இதன் காரணமாக இந்த தொடர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியிம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கிரேய்க் பிராத்வைட் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர் அமீர் ஜாங்குவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குடகேஷ் மோட்டியும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். இருப்பினும் ஷமார் ஜோசப் மற்றும் அல்ஸாரி ஜோசப் உள்ளிட்டோர் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை.

Advertisement

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஷான் மசூத் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர சுழறபந்துவீச்சாளர் சஜித் கான் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் தொடர்ச்சியாக விளையாடி வரும் நசீம் ஷா, அமர் ஜமால், முகமது அப்பாஸ், மிர் ஹம்ஸா ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கஷிப் அலி பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் குர்ராம் ஷஷாதும் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். 

மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க தொடரின் போது காயமடைந்த சைம் அயூபிற்கு பதிலாக அனுபவ வீரர் இமாம் உல் ஹக் மற்றும் முகமது ஹுரைரா ஆகியோர் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் தென் ஆப்பிரிக்க தொடரின் போது அணியில் இருந்து நீக்கப்பட்ட அப்துல்லா ஷஃபிக்கிற்கு இத்தொடரிலும் வாய்ப்பு வ்ழங்கபடவில்லை. மேற்கொண்டு பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், காம்ரன் குலாம் உள்ளிட்டோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ள நிலையில், அணியின் நட்சத்திர வீரர் ஷாஹீன் அஃப்ரிடிக்கு இத்தொடரிலும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் டெஸ்ட் அணி: ஷான் மசூத் (கேப்டன்), சௌத் ஷகீல், அப்ரார் அகமது, பாபர் ஆசம், இமாம்-உல்-ஹக், கம்ரான் குலாம், காஷிப் அலி, குர்ரம் ஷஷாத், முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நோமன் அலி, ரோஹைல் நசீர், சஜித் கான் மற்றும் சல்மான் அலி ஆகா.

வெஸ்ட் இண்டீஸ் அணி: கிரேக் பிராத்வைட் (கேப்டன்), ஜோசுவா டா சில்வா (துணை கேப்டன்), அலிக் அதானஸ், கேசி கார்டி, ஜஸ்டின் கிரீவ்ஸ், காவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அமீர் ஜங்கு, மைக்கேல் லூயிஸ், குடாகேஷ் மோட்டி, ஆண்டர்சன் பிலிப், கீமார் ரோச், கெவின் சின்க்ளேர், ஜெய்டன் சீல்ஸ், ஜோமெல் வாரிக்கன்

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News