பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக சைம் அயூப் 58 ரன்களையும், கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களையும் அகா சல்மான் 54 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொர்ற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Advertisement

இதனையடுத்து முத இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது லிட்டன் தாஸின் சதத்தின் மூலமும், மெஹிதி ஹசனின் அரைசதத்தின் மூலமாகவும் 262 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 138 ரன்களையும், மெஹிதி ஹசன் 78 ரன்களையும் சேர்த்தனர். இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்ரம் ஷாசாத் சிறப்பு சாதனை படைத்தார்.

முதல் இன்னிங்சில் ஷாசாத் 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்மல் ஹுசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன், மெஹ்தி ஹசன் மிராஜ் மற்றும் தஸ்கின் அகமது ஆகியோரது விக்கெட்டுகளை ஷஸாத் கைப்பற்றினார்.  இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஷஷாத் படைத்துள்ளார். முன்னதாக, சோயிப் அக்தர், வக்கார் யூனிஸ் ஆகியோர் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இது தவிர, சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய 12ஆவது பாகிஸ்தான் வீரர் எனும் பெருமையையும் குர்ராம் ஷஷாத் பெற்றுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News