பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி கராச்சியிலும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 

Advertisement

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரண்டு வீரர்களை அணியில் இருந்து விடுவித்துள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மத் மற்றும் டாப் ஆர்டர் பேட்டர் காம்ரன் குலாம் ஆகியோரை விடுவிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

Advertisement

மேலும் இவர்கள் இருவரும் வங்கதேச ஏ அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனல் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 15 வீரர்களை மட்டுமே தங்கள் அணியில் தக்கவைத்துள்ளது. அதேசமயம் இரண்டாவது போட்டியில் இவர்கள் இருவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியில் இணைவார்கள். 

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “”ஆகஸ்ட் 21 ஆம் தேதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாள்ர்களை உள்ளடக்கிய அணியுடன் செல்ல தேர்வாளர்கள் தேர்வு செய்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அப்ரார் அஹ்மதை பெஞ்ச்சில் அமரவைப்பதற்கு பதிலாக, தேர்வாளர்கள் அவரை ஷாஹீன்ஸ் அணியில் சேர்த்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது. 

வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது.

பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கே), சவுத் ஷகீல், அமீர் ஜமால் (உடற்தகுதிக்கு உட்பட்டு), அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், காம்ரன் குலாம், குர்ரம் ஷாஜாத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News