ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வுசெய்தது ஆச்சரியமாக உள்ளது - பார்த்தீவ் படேல்!

Updated: Sat, Dec 14 2024 19:31 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (டிசம்பர் 14) தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.

 இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்த முயற்சித்தனர். அச்சமயத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை எடுத்த நிலையில் முதல்நாள் உணவு இடைவேளையானது எடுக்கப்பட்டது.

அதன்பின்னரும் மழை தொடர்ந்த காரணத்தால் இப்போட்டியின் முதல்நாள் ஆட்டம் அத்துடன் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் உஸ்மான் கவாஜா 19 ரன்களுடனும், நாதன் மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் என களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் பந்துவீசிய நிலையிலும் விக்கெட்டுகள் ஏதும் கைப்பற்றவில்லை. இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த முடிவு ஆச்சரியமளிப்பதாக முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "மேகங்கள் மற்றும் ஆடுகளத்தில் உள்ள ஈரப்பதத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நான் நினைக்கிறேன், பந்து உள்ளே செல்கிறது மற்றும் ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது என்று ரிஷப் பந்த் மற்றும் ரோஹித் சர்மாவிடம் இருந்தும் நாங்கள் கேள்விப்பட்டோம்.

ஆனால் அந்த முடிவைப் பார்த்தால் அது பொதுவான போக்கிற்கு எதிராக இருந்தது. பெரும்பாலான அணிகள், நிபந்தனைகள் எதுவாக இருந்தாலும், இரண்டாவது அல்லது நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது கடினம் என்பதால் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறது. கூடுதலாக, ஆடுகளம் மெதுவாக இருந்தால், பேட்ஸ்மேன் ஆரம்பத்தில் சரிசெய்ய நேரம் கிடைக்கும். ஆட்டம் முன்னேறும் போது, ​​பெர்த்தில் பார்த்தது போல் ஆடுகளங்கள் வேகமாக மாறும்.

எனவே, இப்போட்டியில் இந்திய அணி டாஸை வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது ஆச்சரியமாக இருந்தது. மேலும் இப்போட்டியில் ஹர்ஷித் ரானாவுக்கு பதிலாக ஆகாஷ் தீப் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்பட்டது சரியான முடிவாக தோன்றுகிறது. ஏனெனில் அவர் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதேசமயம் அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக ரவீந்திர ஜடேஜா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளதாக பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹேசில்வுட்.

Also Read: Funding To Save Test Cricket

இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ்தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை