தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் மற்றும் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லண்டன் ஸ்பிரிட் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியானது இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பில் சால்ட் 58 ரன்களையும், மேக்ஸ் ஹோல்டன் 38 ரன்களையும் சேர்த்தனர். லண்டன் ஸ்பிரிட் அணி தரப்பில் ரிச்சர்ட் கிளீசன் மற்றும் ஒல்லி ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லண்டன் அணிக்கு ஜென்னிங்ஸ் ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

Advertisement

ஆனால் மறுபக்கம் களமிறங்கிய வீரர்களில் ஷிம்ரான் ஹெட்மையர் 44 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜென்னிங்ஸ் 61 ரன்களைச் சேர்த்த நிலையிலும், லண்டன் ஸ்பிரிட் அணியால் இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூக்கி விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதன்மூலம் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் லண்டன் ஸ்பிரிட் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியின் போது ஆண்டரே ரஸல் பந்துவீச்சில் பில் சால்ட் சிக்ஸர் விளாசிய காணொளி ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படிஆட்டத்தின் 27வது பந்தில் ஆண்ட்ரே ரஸல் வீசிய ஒரு ஷார்ட் பந்தில் பில் சால்ட் சிக்ஸரை பறக்கவிட்டு அசத்தினார்.

அதன்படி ஆண்ட்ரே ரஸல் அந்த பந்தை வீசுவதற்கு முனதாகவே பில் சால்ட் முழுமையாக தயாராகி, நல்ல நிலையில் வந்து பந்தை டீப் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸருக்கு அனுப்பினார். முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் சீசனிலும் விளையாடினர். இந்நிலையில் ரஸல் பந்துவீச்சில் பில் சால்ட் சிக்ஸர் அடித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News