இங்கிலாந்து அணி இம்மாதம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் வரும் ஆக்ஸட் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இந்த டெஸ்ட் தொடர் நடைபெற இருப்பதால் இரு அணிகளும் கூடுதல் கவனத்துடன் விளையாடவுள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதுடன், முதல் டெஸ்ட் போட்டிக்காக இரு அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதேசமயம் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளதை அடுத்து இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஒல்லி போப் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் பென் ஸ்டோக்ஸ் காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Advertisement

இருப்பினும் ஜோ ரூட், பென் டக்கெட் போன்ற நட்சத்திர வீரர்கள் இருப்பதால், இங்கிலாந்து அணி நிச்சயம் சமமான பலத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஜோ ரூட்டால் அதை செய்ய முடியும். அவருக்கு இப்போது 33 வயதுதான் ஆகிறது. மேலும் சச்சினை விட 3,000 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார். மேலும் இங்கிலாந்து அணி ஆண்டிற்கு 10 முதல் 14 டெஸ் போட்டிகளில் நிச்சயம் விளையாடி வருவதால், ஜோ ரூட் ஆண்டிற்கு 800 முதல் 1000 ரகளை எடுத்தால் கூட மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் ஜோ ரூட்டால் இந்த சாதனையை முறியடிக்க முடியும் என்று நம்புகிறேன். 

மேலும் ஜோ ரூட் அதற்காக இன்னும் பசியுடன் இருந்தால், நிச்ச்யம் அதனை செய்யும் எல்லா வாய்ப்புகளும் அவருக்கு உள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் அவர் தன்னை மெருகேற்றி வருகிறார். அதிலும் சிலர் 50 ரன்களை கடந்த பின் சதமடிக்க தடுமாறும் நிலையில், ஜோ ரூட் ஒவ்வொரு முறையும் 50 ரன்களை கடக்கும் போதெல்லாம் அவர் அதனை சதமாக மாற்றும் திறனை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்” என்று தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து அணிக்காக கடந்த 2012ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜோ ரூட் இதுநாள் வரை 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதம் மற்றும் 63 அரைசதங்கள் என மொத்தம் 12,027 ரன்களை குவித்துள்ளார். அதேசமயம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்15,921 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News