பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நத்தின. இதில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் சைம் அயூப் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ஹாரிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

Advertisement

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 42 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டாம் கொஹ்லர் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த முகமது ஹாரிஸ் அரைசதம் கடந்தார். 

பின்னர் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த முகமது ஹாரிஸ் 54 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 85 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் பனுகா ராஜபக்ஷா 25 ரன்களைச் சேர்த்து உதவினார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது. லாகூர் அணி தரப்பில் ரஷித் கான், ஸமான் கான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News