பிஎஸ்எல் 2024: ரிஸ்வான், ஹென்றிக்ஸ் அதிரடியில் முல்தான் சுல்தான்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Sun, Feb 25 2024 20:24 IST
Image Source: Google

9ஆவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரானது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்தானில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து முல்தான் சுல்தான்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய முல்தான் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் - உஸ்மான் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் உஸ்மான் கான் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்த ரிஸா ஹென்றிக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 77 ரன்க்ள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

அதன்பின் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 51 ரன்களை எடுத்திருந்த ரிஸ்வான் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 7 பவுண்டரி, 4 சிச்கர்கள் என 72 ரன்களைச் சேர்த்திருந்த ரீஸா ஹென்றிக்ஸும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய தஹிர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முதல்தான் சுல்தான்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ் ஆணிக்கு ஜேசன் ராய் - சௌத் சகீல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேசன் ராய் 12 ரன்களுக்கும், சௌத் சகீல் 24 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கவாஜா நஃபே - கேப்டன் ரைலீ ரூஸோவ் இணை அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்லும் முயற்சியில் இறங்கினர். 

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கேப்டன் ரைலீ ரூஸோவ் 30 ரன்களிலும், கவாஜா நஃபே 36 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சஜித் அலியும் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ரூதார்ஃபோர்ட் 21 ரன்களுக்கும், அகீல் ஹொசைன் 9 ரன்களிலும் நடையைக் கட்டினர். 

பின்னர் வந்த வீரர்களும் சோபிக்க தவற 20 ஓவர்கள் முடிவில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே எடுத்தது. முல்தான் அணி தரப்பில் முகமது அலி, டேவிட் வில்லி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் குயிட்ட கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை