இந்தியா - நியூசிலாந்து, வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்தொடர்கள் நடைபெற்றுவரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. 

Advertisement

இதில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். முன்னதாக இந்த பட்டியலில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அவரை பின்னுக்கு தள்ளி காகிசோ ரபாடா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 

Advertisement

அதேசமயம் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்த தவறிய ஜஸ்பிரித் பும்ரா இரண்டு இடங்கள் பின் தங்கி மூன்றாம் இடத்திற்கும், ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு இடங்கள் பின் தங்கி 4ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். அதேசமயம் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 

இதுதவிர்த்து இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் 2 இடங்கள் பின் தங்கி 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் நோமன் அலி 8 இடங்கள் முன்னேறி இப்பட்டியலின் 9ஆம் இடத்திற்கும், சஜித் கான் 12 இடங்கள் முன்னேற்றம் கண்டு 38ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து தொடரில் சதமடித்து அசத்திய பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீல் 20 இடங்கள் முன்னேறி 7ஆவது இடத்தையும், நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா 8 இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அதேசமயம் இந்த பட்டியலில் இந்திய வீரர் ரிஷப் பந்த் 5 இடங்கள் பின் தங்கி 11ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

மேற்கொண்டு நட்சத்திர வீரர் விராட் கோலி 6 இடங்கள் பின் தங்கி 16ஆம் இடத்திற்கும், ஷுப்மன் கில் ஒரு இடம் பின் தங்கி 20ஆம் இடத்தையும், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 9 இடங்கள் பின் தங்கி 24ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மூன்று டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்கள் டாப் 10 இடங்களில் இருந்த நிலையில், தற்சமயம் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே டாப் 10 வரிசையில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தொடர்ந்து முதலிரண்டு இடங்களில் நீடித்து வருகின்றனர். இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச வீரர் மெஹிதி ஹசன் 2 இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தை பிடித்துள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸின் ஜேசன் ஹோல்டரும் 5ஆம் இடத்திற்கு முன்னேறிவுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News