ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், ஒருநாள் தொடரை ஆஃப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெறவுள்ளது. 

Advertisement

அதன்படி ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி மார்ச் 15ஆம் தேதி ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காயம் காரணமாக இந்தியா, இலங்கை தொடர்களிலிருந்து விலகிய ரஷித் கான் மீண்டும் அணியில் இணைந்ததுடன், அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

அவருடன் முஜிப் உர் ரஹ்மான், முகமது நபி, நூர் அஹ்மத், கைஸ் அஹ்மத், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் போன்ற நட்சத்திர வீரர்களும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும் நடப்பு ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு தயாராகும் வகையில் ஆஃப்கானிஸ்தான் அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அந்தவகையில் ரஷித் கான் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

ஆஃப்கானிஸ்தான் டி20 அணி: ரஷித் கான் (கே), இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிக் அடல், இஜாஸ் அஹ்மத்சாய், இஷாக் ரஹிமி, முகமது நபி, நங்யால் கரோடை, அஸ்மத்துல்லா ஓமர்சாய், நூர் அஹ்மத், முஜீப் உர் ரஹ்மான், வஃபாதர் மொமந்த், ஃபரித் மாலிக், நவீன் உல் ஹக், ஃபசல் ஹக் ஃபரூக்கி.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News