ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் பில் சால்ட் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதில் விராட் கோலி 26 ரன்களுக்கும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டிம் டேவிட் 23 ரன்களையும், ஜித்தேஷ் சர்ம 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். 

Advertisement

 இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ரயல்ஸ் தரப்பில் சந்தீப் சர்ம 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களை கடந்ததன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸின் தனித்துவ சாதனையை சமன்செய்துள்ளது.

அதன்படி ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்து 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அதிகமுறை எடுத்த அணிகள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிஎஸ்கேவின் சாதனையை ஆர்சிபி சமன்செய்துள்ளது. முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 26 முறை 200+ ஸ்கோரை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் 26 முறை 200+ ரன்களைச் சேர்த்து சாதனையை சமன்செய்துள்ளது. 

ஐபிஎல் தொடரில் அதிகமுறை 200+ ரன்களை எடுத்த அணிகள் (முதல் இன்னிங்ஸில்)

  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 26 முறை
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 26 முறை
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 17 முறை
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 17 முறை
  • பஞ்சாப் கிங்ஸ் - 16 முறை

ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜுரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, துஷார் தேஷ்பாண்டே, சன்தீப் சர்மா

Advertisement

இம்பாக்ட் வீரர்கள்: வைபவ் சூர்யவன்ஷி, யுத்வீர் சிங் சரக், ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, குணால் சிங் ரத்தோர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விளையாடும் லெவன்: பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்

Also Read: LIVE Cricket Score

Advertisement

இம்பாக்ட் வீரர்கள்: சுயாஷ் ஷர்மா, ரசிக் தார் சலாம், மனோஜ் பந்தகே, ஜேக்கப் பெத்தேல், ஸ்வப்னில் சிங்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News