இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி முதல் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணியானது 290 ரன்களைக் குவித்தது. இதன் காரணமாக இந்திய அணியை விட 99 ரன்கள் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.

Advertisement

பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணியானது தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Advertisement

மறுமுனையில் ரோஹித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டாவது சதத்தை பதிவு செய்தார்.

இதன் மூலம் இந்திய மண்ணை தாண்டி அயல்நாட்டு மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் 3 ஆயிரம் ரன்களை கடந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சதத்தின் மூலம் ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட்டின் நீண்ட நாள் சாதனையையும் முறியடித்துள்ளார். அதாவது இங்கிலாந்து அணிக்கெதிராக இங்கிலாந்து மண்ணில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர் எனும் சாதனைதான் அது. 

முன்னதாக ராகுல் டிராவின் இங்கிலாந்து மண்ணில் 8 சதங்களை விளாசியிருந்தார். ஆனால் தற்போது ரோஹித் சர்மா 9 சதங்களை விளாசி டிராவிட்டின் சாதனையையும் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News