இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியானது நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 73 ரன்களையும், அலெக்ஸ் கேரி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 61 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஷுப்மன் கில் 8 ரன்னிலும், ரோஹித் சர்மா 23 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்னிலும், அக்ஸர் படேல் 27 ரன்னிலும் விக்கெட்டை இழந்த நிலையில், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 84 ரன்னில் ஆட்டமிழந்தார். 

இறுதியில் ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 28 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 42 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 48.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா தனித்துவ சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி ஐசிசி நடத்தும் அனைத்துவிதமான தொடர்களிலும் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டன் எனும் தனித்துவ சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். இதற்குமுன் கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு அணியின் கேப்டனும் இந்த சாதனையை படைத்து கிடையாது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2023ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியி, 2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி தற்போது 2025 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி ஆகியவற்றிற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இதில் அவர் டி20 உலகக்கோப்பை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News