கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? - ரோஹித் சர்மா பதில்!

Updated: Tue, Feb 28 2023 18:26 IST
Rohit Sharma on KL Rahul's removal as vice-captain (Image Source: Google)

பார்டர் கவாஸ்கர் கோப்பை கான டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை இந்தூரில் நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியா ந அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் இந்தூர் மைதானத்தில் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாட் கம்மின்ஸ் நாடு திரும்பியதால் ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்டீவன் ஸ்மித் இடைக்கால கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். வீரர்களின் காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இந்திய அணியை பொறுத்தவரை பெரும்பாலும் ஆடும் லெவனில் மாற்றம் இருக்காது. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படும் என்றால் கே எல் ராகுலுக்கு பதிலாக ஷுப்மன் கில் களம் இறங்குவார் . இது ஒன்றுதான் மாற்றமாக இருக்கும் மற்றபடி அணித் தேர்வில் எந்தவித மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் இந்த போட்டி துவங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மா, “கடந்த டெஸ்ட் போட்டியின் போது நான் கூறியதை போலவே ஒரு வீரரிடம் திறமை இருந்தால் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் நீண்ட காலம் வழங்கப்படும் . கே எல் ராகுல் ஒரு திறமையான வீரர் அவருக்கான முழுவாய்ப்புகளும் வழங்கப்படும். துணை கேப்டன் பதவிக்கும் ஆடும் லெவனில் இடம்பெறுவதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை.

அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் போதுமான அளவு பயிற்சிகளை கொடுத்து வருகிறோம். அதனால் ஒருவர் நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபடுவதை வைத்து அவர் அடுத்த போட்டியில் ஆடுவார் ஆட மாட்டாரா என்பதை கூற முடியாது. மேலும் நாளைய போட்டியில் விளையாடப் போகும் வீரர்கள் யார் என்பதை போட்டி துவங்குவதற்கு முன்பாக தான் நாங்கள் அறிவிக்க இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

நேற்றைய பயிற்சியின் போது கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் நீண்ட நேரம் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் கேஎல் ராகுலுக்கு பதிலாக கில் நாளை களம் இறக்கப்படலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இது பற்றி பதில் அளித்திருக்கும் ரோஹித் சர்மா தற்போது அணியில் விளையாடும் வீரர்கள் விளையாடும் வீரர்கள் யார் என்பதை அறிவிக்க மாட்டோம் என தெரிவித்திருக்கிறார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை