ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.

Advertisement

இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மீண்டும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அதன்பின் தனது விஸ்வரூபத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, மிட்செல் ஸ்டார்க் வீசிய இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை விளாசியதுடன், அந்த ஓவரில் 28 ரன்களைச் சேர்த்து அனைவரையும் மிரளவைத்தார்.

Advertisement

அதன்பின்னும் தனது அதிரடியைக் கைவிடாத ரோஹித் சர்மா அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசியதுடன் 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் எனும் சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.  இதன்மூலம் இந்திய அணி முதல் 6 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ரன்களைச் சேர்த்தது.

 

அதன்பின் மறுபக்கம் களமிறங்கிய ரிஷப் பந்த் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், ரோஹித் சர்மா தனது சதத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்.  இதன்மூலம் இந்திய அணியானது தற்போதுவரை 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களைச் சேர்த்துள்ளார். இந்நிலையில் மிட்செல் ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் ரோஹித் சர்மா அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை விளாசியதுடன் 28 ரன்களைச் சேர்த்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News