இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டேனியல் லாரன்ஸ், ஒல்லி போப் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும், பென் டக்கெட் 40 ரன்களிலும், ஹாரி புரூக் 33 ரன்களிலும், ஜேமி ஸ்மித் 21 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

Advertisement

அதேசமயம் இப்போட்டியில் நான்காம் வரிசையில் களமிறங்கிய ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். அதேசமயம், அவருடன் இணைந்து விளையாடிய கஸ் அட்கின்சனும் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 33ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய கஸ் அட்கின்சன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்களைச் சேர்த்தது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த கஸ் அட்கின்சன் 74 ரன்களுடனும், மேத்யூ பாட்ஸ் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டிலும் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதன்படி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் 10ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களுடனும் முதலிடத்திலும், ஜாக் காலிஸ் 45 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. 

அதுமட்டுமில்லாமல் இந்த சதத்தின் மூலம் இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய வீரர் எனும் முன்னாள் கேப்டன் ஆலெய்ஸ்டர் குக்கின் சாதனையையும் ஜோ ரூட் சமன்செய்து அசத்தியுள்ளார். முன்னதாக அலெய்ஸ்டர் குக் 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 33 சதங்களை அடித்ததே  சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஜோ ரூட் 145ஆவது போட்டியிலேயே 33 சதங்களை விளாசி அச்சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்துள்ள வீரர்கள்

  • அலெஸ்டர் குக் - 33 சதங்கள்
  • ஜோ ரூட் - 33 சதங்கள்
  • கெவின் பீட்டர்சன் - 23 சதங்கள்
  • வால்லி ஹாம்மண்ட் - 22 சதங்கள்
  • காலின் கௌட்ரி - 22 சதங்கள்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News