அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட பாவெல்; கம்பேக் கொடுத்த லிவிங்ஸ்டோன் - வைரலாகும் காணொளி!

Updated: Thu, Jun 20 2024 08:22 IST
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட பாவெல்; கம்பேக் கொடுத்த லிவிங்ஸ்டோன் - வைரலாகும் காணொளி! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸை எதிர்த்து நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தியது. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் பிராண்டன் கிங் 23 ரன்கள் சேர்த்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். 

அவரைத்தொடர்ந்து ஜான்சன் சார்லஸ் 38 ரன்களிலும், கேப்டன் ரோவ்மன் பாவெல் 5 சிக்ஸர்களுடன் 36 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 36 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸலும் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து கடின இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் தனது ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடித்த ரோவ்மன் பாவெலின் விக்கெட்டை இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் கைப்பற்றிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

அதன்படி, இன்னிங்ஸின் 15ஆவது ஓவரை இங்கிலாந்து அணி தரப்பில் லியாம் லிவிங்ஸ்டோன் வீச, அந்த ஓவரை எதிர்கொண்ட ரோவ்மன் பாவெல் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். பின்னர் அந்த ஓவரின் கடைசி பந்தையும் சிக்ஸர் அடிக்க முயற்சித்து பாவெல் தூக்கி அடிக்க அந்த பந்தானது ஒவுட்சைட் எட்ஜாகி மார்க் வுட்டிடம் தஞ்சமடைந்தது. இந்நிலையில் பாவெலின் விக்கெட்டை வீழ்த்தில் லிவிங்ஸ்டோனின் காணொளியானது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை