South Africa vs Pakistan 2nd ODI Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 19) கேப்டவுனில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியானது ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியதன் காரணமாக இப்போட்டியில் அதற்கான பதிலடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் களமிறங்கும் பாகிஸ்தான் அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

SA vs PAK 2nd ODI : போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான்
  • இடம்: நியூலேண்ட் கிரிக்கெட் மைதானம், கேப்டவுன்
  • நேரம்: டிசம்பர் 19, மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

SA vs PAK 2nd ODI Live Streaming Details

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

SA vs PAK: Head-to-Head In ODI

  • Total Matches: 84
  • South Africa: 52
  • Pakistan: 31
  • No Result: 01

SA vs PAK: Pitch Report

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தன் அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 47 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 30 முறை முதலில் பேட்டிங் செய்ய அணிகளும், 16 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 233 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 188 ரன்களாகவும் உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 367 ரன்கள் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

South Africa vs Pakistan Predicted XIs

பாகிஸ்தான் உத்தேச லெவன்: சைம் அயூப், அப்துல்லா ஷபீக், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (கேப்டன்), கம்ரான் குலாம், சல்மான் ஆகா, இர்ஃபான் கான், ஷஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது

Advertisement

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: டெம்பா பவுமா (கே), டோனி டி ஸோர்ஸி, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, குவேனா மபாகா

SA vs PAK Dream11 Team

  • Wicket-keepers: ஹென்ரிச் கிளாசென் , முகமது ரிஸ்வான்
  • Batters: டெம்பா பவுமா(கேப்டன்), டேவிட் மில்லார், பாபர் ஆசம்
  • All-rounder: சைம் அயூப் (துணை கேப்டன்), மார்கோ ஜான்சென், ஐடன் மார்க்ரம், சல்மான் ஆகா
  • Bowlers: காகிசோ ரபாடா, ஷஹீன் அஃப்ரிடி

SA vs PAK 2nd ODI Dream11 Prediction, Today Match SA vs PAK , SA vs PAK Dream11 Team, Fantasy Cricket Tips, SA vs PAK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between South Africa vs Pakistan

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News