எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸை 107 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!

Updated: Wed, Jan 29 2025 22:41 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இப்போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் அறிமுக வீரராக டோனி டி ஸோர்ஸிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக ஸாக் கிரௌலி பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேசமயம் எம்ஐ எமிரேட்ஸ் அணியில் காலின் இங்கிரம் பிளேயிங் லெவனில் மீண்டும் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டோனி டி ஸோர்ஸி மற்றும் டேவிட் பெடிங்ஹாம் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனி டி ஸோர்ஸி 2 ரன்னில் விக்கெட்டைஇழக்க, அடுத்து களமிறங்கிய டாம் அபெலும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் 10 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன்னிலும், அதிரடியாக தொடங்கிய மார்கோ ஜான்சன் 7 ரன்னிலும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த டேவிட் பெடிங்ஹாம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரிகளுட 45 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் அந்த அணி 77 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Also Read: Funding To Save Test Cricket

இதனையடுத்து களமிறங்கிய வீரர்களில் ஆண்டிலே சிமெலேன் 21 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எம்ஐ கேப்டன் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கார்பின் போஷ் 4 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை