இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் இந்திய அணியானது மூன்று போட்டிகளிலும், தென் ஆப்பிரிக்க அணி ஒரு வெற்றியையும் பதிவுசெய்தது. இதன்மூலம் இந்திய அணி இந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

Advertisement

மேலும் இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா 2 சதங்களையும், பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் பந்துவீச்சிலும் தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் சதமடித்து அசத்திய சஞ்சு சாம்சன் அடுத்தடுத்த போட்டிகளில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. 

Advertisement

இருப்பினும் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தொடரின் கடைசி போட்டியிலும் சதமடித்து அசத்தியதுடன், ஒரே ஆண்டில் மூன்று சர்வதேச டி20 சதங்களை அடித்த முதல் வீரர் எனும் சாதனையையும் படைத்து அசத்தினார். அதிலும் குறிப்பாக இத்தொடரில் மட்டும் அவர் 20 சிக்ஸர்களை விளாசி அசத்தினார். இதன்மூலம் தற்சமயம் மற்றொரு சாதனைக்கும் சஞ்சு சாம்சன் சொந்தக்காரராகியுள்ளார். 

அதன்படி நடப்பு ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய வீரர் எனும் சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். அந்தவகையில் நடப்பு 2024ஆம் ஆண்டு 13 போட்டிகளில் 12 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 31 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 11 இன்னிங்ஸ்களில் விளையாடி 23 சிக்ஸர்களை அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். 

2024ஆம் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் (டி20ஐ)

  • சஞ்சு சாம்சன் - 31 சிக்ஸர்கள்
  • ரோஹித் சர்மா - 23 சிக்ஸர்கள்
  • சூர்யகுமார் யாதவ் - 22 சிக்ஸர்கள்
  • திலக் வர்மா - 21 சிக்ஸர்கள்
  • அபிஷேக் சர்மா - 19 சிக்ஸர்கள்

இதுதவிர்த்து நடப்பு 2024ஆம் ஆண்டில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் சஞ்சு சாம்சன் முதலிடத்தைப் பிடித்து சாதித்துள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டில் சஞ்சு சாம்சன் 29 போட்டிகளில் 27 இன்னிங்ஸிகளில் விளையாடி 3 சதங்கள், 6 அரைசதங்கள் என 967 ரன்களைக் குவித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 25 இன்னிங்ஸில் ஒரு சதம், 6 அரைசதங்கள் என 921 ரன்களை எடுத்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். 

Advertisement

2024ஆம் ஆண்டில் அதிக டி20 ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்

  • சஞ்சு சாம்சன் - 967 ரன்கள் (29 போட்டிகள்)
  • விராட் கோலி - 921 ரன்கள் (25 போட்டிகள்)
  • அபிஷேக் சர்மா - 874 ரன்கள் (32 போட்டிகள்)
  • திலக் வர்மா - 839 ரன்கள் (22 போட்டிகள்)
  • ரோஹித் சர்மா - 795 ரன்கள் (25 போட்டிகள்)

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News