தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி நவம்பர் 08ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முடிவடையவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி டர்பனிலும், இரண்டாவது போட்டி க்கெபெர்ஹாவிலும், மூன்றாவது போட்டி செஞ்சூரியனிலும், நான்காவது போட்டி ஜொஹன்னஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது. 

Advertisement

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இத்தொடருக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களான ரமந்தீப் சிங், வைஷாக் விஜயகுமார், யாஷ் தயாள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆவேஷ் கான், அக்ஸர் படேல் உள்ளிட்டோரும் இந்திய டி20 அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

மேற்கொண்டு சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள காரணத்தால் வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. இதுதவிர்த்து காயம் காரணமாக ஷிவம் தூபே, மயங்க் யாதவ், ரியான் பராக் மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கும் இடம் கிடைக்கவில்லை.

ஐடன் மார்க்ரம் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், மார்கோ ஜான்சென் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்டோர் மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ளனர். மேற்கொண்டு அறிமுக வீரர்களான மிஹ்லலி மபோங்வானா, ஆண்டிலே சிமெலேன் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ள நிலையில், காகிசோ ரபாடா மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இந்த டி20 தொடரில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் 59 ரன்கள் எடுத்தால் டி-20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை நிறைவு செய்வார். இதன் மூலம் இந்தியாவிலிருந்து இந்த எண்ணிக்கையை எட்டிய பத்தாவது வீரர் எனும் பெருமையாஇயும் அவர் பெறுவார். இதற்கு முன்னர் இந்திய அணியின் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், எம்எஸ் தோனி, தினேஷ் கார்த்திக் மற்றும் ராபின் உத்தப்பா மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

சஞ்சு சாம்சன் இதுவரை 281 டி-20 போட்டிகளில் 268 இன்னிங்ஸ்களில் விளையாடி 6941 ரன்கள் எடுத்துள்ளார். முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்ததுடன், 47 பந்துகளில் 111 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News