தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று (டிசம்பர் 10) டர்பனில் உள்ள் கிங்ஸ் மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆபபிரிக்க அணியானது ஏற்கென்வே இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவிய கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

Advertisement

அதிலும் தற்சமயம் தென் ஆப்பிரிக்க அணியானது ஹென்ரிச் கிளாசென் தலமையில் களமிறங்கவுள்ளது. மறுபக்கம் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே டி20 தொடரை வென்ற கையோடு இந்த தொடரை எதிர்கொள்கிறது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

Advertisement

இந்நிலையில் இந்த தொடரின் போது, ​​பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடி தனது பெயரில் சில பெரிய சாதனைகளை பதிவுசெய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி மேற்கொண்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

தற்போது, ​​இந்த பட்டியலில் தென் அப்பிரிக்க அணியின் முன்னால் ஜாம்பவான் டேல் ஸ்டெயின் பாகிஸ்தானுக்கு எதிராக 7 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் ஷாஹீன் அஃப்ரிடி 10 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் உள்ளார். அதேசமயம் ஒட்டுமொத்தமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக தென் ஆப்பிரிகாவின் தப்ரைஸ் ஷம்ஸி உள்ளார். 

இதுதவிர்த்து சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்த ஷாஹீன் அஃபிடிக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது அவர் 73 போட்டிகளில் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானின் மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார். தற்போது பாகிஸ்தான் அணிக்காக ஹரிஸ் ரவுப் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் டி20 அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் ஆசாம், ஹாரிஸ் ரவுஃப், ஜஹந்தத் கான், முகமது அப்பாஸ் அஃப்ரிடி, முகமது ஹஸ்னைன், முஹம்மது இர்பான் கான், உமைர் பின் யூசுப், சைம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷாஹீன் அஃப்ரிடி, சுஃபியான் முகிம், தயாப் தாஹிர், உஸ்மான் கான்.

Advertisement

தென் ஆப்பிரிக்க டி20 அணி: ஹென்ரிச் கிளாசென் (கேப்டன்), ஓட்னீல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கி, டொனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், பேட்ரிக் க்ரூகர், ஜார்ஜ் லிண்டே, குவேனா மபாகா, டேவிட் மில்லர், அன்ரிச் நோர்ட்ஜே, நகாபா பீட்டர், ரியான் ரிக்கேல்டன், தப்ரைஸ் ஷம்சி, அண்டில் சிமெலேன் மற்றும் ரஸ்ஸி வான் டெர் டுசென்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News