சுனில் நரைனைப் போல் பந்துவீசிய ஸ்ரேயாஸ் ஐயர் - வைரல் காணொளி!

Updated: Wed, Aug 28 2024 11:46 IST
Image Source: Google

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் பதவியேற்றதில் இருந்து இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பேட்டர்களையும் பந்துவீச்சாளர்களாக மாற்றி வருகிறார். அந்தவகையில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ரோஹித் சர்மா, ரியான் பராக் என பேட்டர்கள் அனைவரும் பந்துவீச்சிலும் அசத்தினர். 

மேற்கொண்டு இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் அனைவரும் பிசிசிஐ நடத்தும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் படியும் உத்திரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் நிலையில், அதிலிருந்து ஒருசில வீரர்கள் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. 

அந்தவகையில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மும்பை அணிக்காக புஜ்ஜி பாபு  கிரிக்கெட்  தொடரில் விளையாடி வருகின்றன. இத்தொடரில் டிஎன்சிஏ லெவன் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறன்றன. இதில், மும்பை அணிக்காக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சில் ஒருசில ஓவர்களை வீசினார். இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீசும் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் சுனில் நரைனின் பந்துவீச்சை பிரதியெடுப்பது போல் ஸ்ரேயாஸ் ஐயரும் பந்துவீசிய நிகழ்வானது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் ஐபிஎல் தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுனில் நரைன் இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடிவரும் நிலையில், தாற்போது சுனில் நரைனைப் போல் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீசிய காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை