UAE Squad For T20 Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடருக்கான ஐக்கிய அரபு அமீரக அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், அணியில் ஜுனைத் சித்திக், ஹர்ஷித் கௌசிக் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

இந்த தொடரின் முதல் போட்டியில், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்திய அணி செப்டம்பர் 10-ம் தேதி முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது. மேலும், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.

அந்தவகையில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணியும், சல்மான் அலி ஆகா தலைமையில் பாகிஸ்தான் அணியும், லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணியும், ஹாங்காங் உள்ளிட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் உள்ளிட்ட அணிகள் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான ஐக்கிய அரபு அமீரக அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முகமது வசீம் தலைமையிலான இந்த அணியில் ஜுனைத் சித்திக், ஹர்ஷித் கௌசிக், முகமது ஃபரூக், முகமது ஜவாதுல்லா ஆகியோருக்கு டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ராகுல் சோப்ரா, ரோஹித் கான், ஹைதர் அலி, ஆசிஃப் கான், துருவ் பராஷர், ஆலிஷான் ஷஃபு, ஹர்ஷித் கௌசிக் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

Advertisement

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி: முஹம்மது வசீம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் ஷர்மா, ஆசிப் கான், துருவ் பராஷர், ஈதன் டிசோசா, ஹைதர் அலி, ஹர்ஷித் கௌசிக், ஜுனைத் சித்திக், முஹம்மது ஃபரூக், முஹம்மது ஜவதுல்லா, முஹம்மது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ரோஹித் கான் மற்றும் சாகீர் கான்.

Also Read: LIVE Cricket Score

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News