இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் ஜிம்பாப்வே ஒரு வெற்றியும், இந்தியா இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கின்றன. இதனால் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் டி20 தொடரை கைப்பற்றும்.

Advertisement

அதேசமயம் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்றால் தொடர் சமனிலைக்குச் சென்று, அடுத்த போட்டியின் முடிவைப் பொடுத்து தொடரின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படும். இதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் விளையாடிவருகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ரஸா 46 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இந்திய அணி இலக்கை நோக்கி விளையாடிவருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் ஜிம்பாப்வே அணியின் கேப்டனும் நட்சத்திர ஆல் ரவுண்டருமான சிக்கந்தர் ரஸா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதன்படி இன்றைய போட்டியில் சிக்கந்தர் ரஸா 17 ரன்களைச் செர்த்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை எட்டினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக இரண்டாயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை படைத்து அசத்தியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக கடந்த 2013ஆம் ஆண்டு அறிமுகமான சிக்கந்தர் ரஸா இதுநாள் வரை 89 டி20 போட்டிகளில் விளையாடி 14 அரைசதங்களுடன் 1983 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News