Sri Lanka vs Bangladesh: இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி விளையாடி வரும் நிலையில், இரண்டாவது போட்டியில் நட்சத்திர ஆல் ரவுண்ட்ர் மெஹிதி ஹசன் மிராஸ் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வங்கதேச அணியானது தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கலே கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வரும் இரு அணிகளுக்கும்ம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ்லில் வங்கதேச அணி 495 ரன்களையும், இலங்கை அணி 485 ரன்களையும் சேர்த்துள்ளன. இதையடுத்து 10 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணி இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்து வருகிறது.

Advertisement

இதனையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூன் 25ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக வங்கதேச அணிக்கு நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி காய்ச்சல் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத வங்கதேச அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் தற்சமயம் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவர் தனது பயிற்சியையும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் மெஹிதி ஹசன் மிராஸ் விளையாடுவார் என கூறப்படுகிறது. மெஹிதி ஹசன் மிராஸின் வருகை வங்கதேச அணியை மேலும் வலிமைப்படுத்தும். ஏனெனில் இதுவரை 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் பேட்டிங்கில் 2 சதம், 9 அரைசதங்களுடன் 2068 ரன்களைக் குவித்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

இதுதவிர்த்து பந்துவீச்சில் 13 ஐந்து விக்கெட்டுகளுடன் 205 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும் அவர் வங்கதேச டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர்த்து சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்ட மெஹிதி ஹசன் மிராஸ், மே மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News