Bangladesh T20 squad: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமாஅன நஜ்முல் ஹொசைன் சாண்டோ அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்த நிலையில், தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்டன் தாஸ் தலைமையிலான இந்த டி20 அணியில் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான நஜ்முல் ஹொசைன் சாண்டோ நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் பாகிஸ்தான், யுஏஇ டி20 தொடர்களில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதன் காரணமாக மற்றொரு டாப் ஆர்டர் வீரர் முகமது நைம் மீண்டும் வங்கதேச டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள தஸ்கின் அஹ்மத், முஸ்தஃபிசூர் ரஹ்மான் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் டி20 தொடரில் விளையாடிய கலித் அஹ்மத், தன்வீர் இஸ்லாம், ஹசன் மஹ்முத், சௌமீயா சர்கார் உள்ளிட்டோரும் இத்தொடரில் இருந்து நிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

வங்கதேச டி20 அணி: லிட்டன் குமார் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமன், முகமது நைம் ஷேக், தவ்ஹித் ஹிரிடோய், ஜாக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன் பட்வாரி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், ஷக் மஹேதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப், முகமது சைபுதீன்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News