இங்கு ரன்களை எடுப்பது சவாலானது - சனத் ஜெயசூர்யா!

Updated: Mon, Aug 19 2024 22:24 IST
Image Source: Google

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் (ஆகஸ்ட் 21) மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து இலங்கை அணியானது இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்திலும் விளையாடியது. இந்த போட்டியில் இங்கிலாந்து லையன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதனையடுத்து இரு அணிகளும் முதல் டெஸ்ட் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. மேற்கொண்டு இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியானது தங்கள் பிளேயிங் லெவனை இன்று அறிவித்துள்ளது. 

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கோடைகால சுற்றுப்பயணத்தை நாங்கள் பெற்றிருப்பது மிகவும் சிறப்பானது, ஏனென்றால் விக்கெட்டுகள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, மேலும் ஆண்டின் இந்த நேரத்தில் அதிக சூரிய ஒளி இங்கு இருக்கும்.

ஆரம்பகால கோடை சுற்றுப்பயணங்களை விட இது எங்கள் நிலைமைகளுக்கு மிகவும் ஒத்திருக்கிறது. இது ஒரு சிறந்த வாய்ப்பு என்பதை வீரர்கள் அறிந்திருப்பதை உறுதி செய்துள்ளேன். மேலும் இந்த டொடரில் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வம் வீரர்களிடம் இருக்கிறதா என்பதை நான் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இதுபோன்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது உங்களுக்கு மீண்டும் எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பு அல்ல.

எனவே, நம்மால் முடிந்தவரை இத்தொடரில் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். இங்கு ரன்களை எடுப்பது சவாலானது, ஏனென்றால் ஆடுகளங்கள் தட்டையாக இருந்தாலும், பந்து ஸ்விங் அல்லது சீமிங்கைத் தொடங்கும். அதை எவ்வாறு சரிசெய்வது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் எங்களுக்கு தேவையான பணியாளர்கள் எங்களிடம் உள்ளனர், ஆனாலும் இத்தொடரை வெற்றிபெற நாங்கள் கடுமையாக போராட வேண்டும்.

இங்குள்ள சூழலில் உங்கள் பிளேயிங் லெவனில் நீங்கள் ஆறு அல்லது ஏழு பேட்டர்களை தேர்வு செய்து விளையாடினால், அதில் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே சிறப்பாக செயல்படுவார்கள். அதனால் இங்கு நல்ல தொடக்கம் கிடைத்தால் அதனை பயன்படுத்தி பேட்டர்கள் பெரிய இன்னிங்ஸை விளையாட வேண்டும். சவாலான விக்கெட்டுகளில் அவர்களுக்கு அந்த பொறுப்பு இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும். ஒவ்வொருவரும் தங்கள் இயல்பான விளையாட்டை விளையாட வேண்டும்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இங்கு முதல் பத்து ஓவர்களில் தான் அதிக அழுத்தம் இருக்கும் என்று நினைக்கிறேன். வரலாற்று ரீதியாகப் பார்த்தால், முதல் பத்து ஓவர்களிலேயே தாக்குப்பிடித்து விரைவாக ரன்களை குவித்து வருகின்றனர். அதை எதிர்க்க சில திட்டங்களை வைத்துள்ளோம். அவர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். மேலும் இங்கு டியூக் வகை பந்துகளை பயன்படுத்துவதால், பந்து பழையதாகிவிட்டால், அது இன்னும் சீம் ஆகும் தன்மை கொண்டது. அதுவே அதன் தனித்துவம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை