Sri Lanka vs Nepal, Match 23 Dream11 Prediction, T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஒன்பதாவது ஐசிசிஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் நாளை மறுநாள் அதிகாலை நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. அதேசமயம் நேபாள் அணியும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பானது கேள்விகுறியாக மாறியுள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

SL vs NEP: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs நேபாள்
  • இடம் - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம், ஆண்டிகுவா
  • நேரம் - ஜூன் 12ஆம் தேதி, அதிகாலை 05 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

SL vs NEP Pitch Report

ஆண்டிகுவாவில் அமைந்துள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானமானது வரலாற்றில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு மித வேகத்தில் பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மேலும் இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோரானது 125 ரன்களாக இருந்தாலும், இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே அதிகளவு வெற்றியை ஈட்டியுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

SL vs NEP T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 00
  • இலங்கை - 00
  • நேபாள் - 00
  • முடிவில்லை - 00

SL vs NEP: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Sri Lanka vs Nepal Probable Playing XI

இலங்கை அணியின் உத்தேச லெவன்: பாதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய் டி சில்வா, சரித் அசலங்கா, வனிந்து ஹசரங்கா (கேப்டன்), ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, மகேஷ் தீக்ஷனா, மதிஷா பதிரானா, நுவான் துஷார.

Advertisement

நேபாள அணியின் உத்தேச லெவன்: குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், அனில் ஷா, ரோஹித் குமார் பௌடல் (கேப்டன்), குஷால் மல்லா, தீபேந்திர சிங் ஐரி, சோம்பால் கமி, குல்ஷன் ஷா, கரண் கேசி, சாகர் தாகல், அவினாஷ் போஹ்ரா.

SL vs NEP T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - குசல் மெண்டிஸ்
  • பேட்ஸ்மேன்கள் - பதும் நிஷங்கா, ரோஹித் குமார் பௌடல்
  • ஆல்ரவுண்டர் - வனிந்து ஹசரங்கா (கேப்டன்), தீபேந்திர சிங் ஐரி (துணை கேப்டன்), தசுன் ஷனகா, கரண் கே.சி, தனஞ்சய் டி சில்வா
  • பந்துவீச்சாளர்கள் – மதிஷ பதிரானா, சோம்பால் கமி, நுவான் துஷார.

SL vs NEP Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match SL vs NEP, SL vs NEP Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs NEP Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs Nepal

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News