ENG vs IND: ஒருநாள் அணியில் மீண்டும் ஸ்டோக்ஸ், ரூட், பேர்ஸ்டோவ்; தலைமை ஏற்கும் பட்லர்!

Updated: Fri, Jul 01 2022 18:04 IST
Image Source: Google

இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது இந்திய அணி.

டெஸ்ட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இந்த போட்டி முடிந்ததும், ஜூலை 7, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும், ஜூலை 12, 14, 17 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் நடக்கவுள்ளன.

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் கரோனா காரணமாக ரோஹித் சர்மா ஆடவில்லை. அதனால் பும்ரா கேப்டனாக செயல்படவுள்ளார். ஆனால் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக செயல்படுகிறார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் மீண்டும் திரும்பியுள்ளனர். டேவிட் மாலுக்கு டி20 அணியில் மட்டும் இடம் கிடைத்துள்ளது.

அதேசமயம் டி20 அணியில் சாம் கரண், மேத்யூ பர்க்கின்சன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரிச்சர்ட் க்ளீசன் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து டி20 அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஹாரி புரூக், சாம் கரண், ரிச்சர்ட் க்ளீசன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், தைமல் மில்ஸ், மேத்யூ பார்கின்சன், ஜேசன் ராய், பில் சால்ட், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி

இங்கிலாந்து ஒருநாள் அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், கிரேக் ஓவர்டன், மேத்யூ பார்கின்சன், ஜோ ரூட், ஜேசன் ராய், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லி, டேவிட் வில்லி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை