இந்திய அணியின் நட்சத்திர அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறி அண்மையில் லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளார். அதோடு குடல் இறக்கம் பாதிப்பாலும் அவதிப்பட்டு வரும் அவர் விரைவில் ஜெர்மனி சென்று அதற்கான சிகிச்சையையும் எடுக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

Advertisement

உலகின் நம்பர் 1 டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் சூர்யகுமார் யாதவ் இப்படி அடுத்தடுத்த பாதிப்புகளை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவர் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாக்கின.

Advertisement

அதோடு டி20 உலக கோப்பை தொடருக்குள் அவர் முழு உடற்தகுதியை எட்டி விடுவாரா? என்ற சந்தேகமும் பரவலாக காணப்படுகிறது. இந்நிலையில் லண்டன் சென்று கணுக்கால் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பிய சூர்யகுமார் யாதவ் தனது உடற்பகுதி குறித்த முக்கிய அப்டேட் ஒன்றினை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

 

அந்த வகையில் அவர் தற்போதைக்கு வலைப்பயிற்சியில் கால்களை சற்று நகர்த்தி விளையாடும் ஒரு பயிற்சி காணொளியை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் தற்போது அவர் கணுக்கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு சற்று நகர்ந்து விளையாட முடிவதை காண்பித்துள்ளார். இருப்பினும் அவரால் முழு வேகத்தில் பழைய மாதிரி பயிற்சியில் ஈடுபட முடியாது என்பதனால் பொறுமையாகவே அவர் இந்த காயத்திலிருந்து விடுபடுவார் என்று தெரிகிறது. அதோடு ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் வரை இருக்கும் வேளையில் நிச்சயம் அவர் அதற்குள் படிப்படியாக சரியாகி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News