ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முத்லில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது அமெலியா கெர் மற்றும் புரூக் ஹாலிடே ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 43 ரன்களும் புரூக் ஹாலிடே 38 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.

Advertisement

அந்த அணியின் தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் அதிரடியாக விளையாடி 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தா நிலையில், அடுத்து களமிறங்கிய முன்னணி வீராங்கனைகள் அனைவரும் அடுதடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்ட்களை இழந்து பெவிலியானுக்கு நடையைக் கட்டினர்.   இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்ததுடன் 126 ரன்களை மட்டுமே எடுத்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அமெலியா கெர், ரோஸ்மெரி மெய்ர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இபோட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என அசத்திய அமெலியா கெர் ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் அனுபவ வீராங்கனை சூஸி பேட்ஸ் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி, இப்போட்டியில் சூஸி பேட்ஸ் விளையாடியதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை எனும் மிதாலி ராஜின் சாதனையை முறியடித்து சூஸி பேட்ஸ் புதிய சாதனையை படைத்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

முன்னதாக இந்திய அணியின் முன்னால் கேப்டன் மிதாலில் ராஜ், 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில், இந்திய அணிக்காக மூன்றும் வடிவங்களையும் சேர்த்து மொத்தம் 333 போட்டிகளில் விளையாடியதே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் சூஸி பேட்ஸ் 334 போட்டிகளில் விளையாடி புதிய சாதனை படைத்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீராங்கனை 322 போட்டிகளில் விளையாடி மூன்றாம் இடத்தில் உள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News