அடுத்தடுத்து பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய ஆர்ச்சர்; வைரலாகும் காணொளி!

Updated: Fri, Jun 21 2024 22:59 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். 

இதில் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த குயின்டன் டி காக் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் ரீஸா ஹென்ரிக்ஸ் 19 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி காக் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.

அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன் 8 ரன்னிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கி அதிரடி காட்டிய டேவிட் மில்லரும் 43 ரன்களுக்கு விக்கெட்டை இழந்த நிலையில், மற்ற வீரர்களும் சொபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியும் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில் கடைசி ஓவரை வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்படி அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லரும், அடுத்து வந்த மார்கோ ஜான்சனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை