ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் அத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த கோப்பையை வென்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

Advertisement

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன்படி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. மேலும் இந்த அணியின் துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியாவே நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

அதன்படி அணியின் பேட்டர்கள் வரிசையில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தேர்வாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி விக்கெட் கீப்பர்களுக்கான தேர்வில் நடப்பு ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ரிஷப் பந்து ஓராண்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளார். 

அதேசமயம் அணியின் ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்ததுடன், ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் ஷிவம் தூபே மற்றும் அக்ஸர் படேல் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அணியின் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோருடன் நீண்ட காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த யுஸ்வேந்திர சஹாலிற்கு இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. 

 

அதேபோல் அணியின் கூடுதல் வீரர்கள் வரிசையில் ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மத் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட், தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுல் மற்றும் ரவி பிஷ்னோய் போன்ற வீரர்களுக்கு இந்த இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

Advertisement

இந்திய அணி: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெயஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங். 

ரிஸர்வ் வீரர்கள் - ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மத், ஆவேஷ் கான்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News