ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் அரைசதங்கள் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 67 ரன்களையும், டேவிட் வார்னர் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களையும் சேர்த்தனர். ஓமன் அணி தரப்பில் மெஹ்ரான் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஓமன் அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக அயான் கான் 38 ரன்களையும், மெஹ்ரான் கன் 27 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மார்கஸ் ஸ்டொய்ன்ஸ் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது நான்காவது ஓவரை வீச வந்த நிலையில், ரன்னப்பின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பின் காரணமாக அந்த ஓவரை வீசாமல், பாதியிலேயே பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் அந்த ஓவரை கிளென் மேக்ஸ்வெல் வீசினார். இந்நிலையில் மிட்செல் ஸ்டார்க்கின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை அந்த அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் வழங்கியுள்ளார். 

ஸ்டார்க் குறித்து பேசிய மார்ஷ், “மிட்செல் ஸ்டார்க் இன்றைய போட்டியில் தனது அனுபவத்தைக் காட்டினார். அதேசமயம் அவர் தசைப்பிடிப்பின் காரணமாக தனது ஓவர்களை முழுமையாக வீசமுடியவில்லை. ஆனாலும் அவருக்கு ஏற்பட்டது ஒரு தசைப்பிடிப்பு மட்டுமே, இருந்தாலும் அவரை மோலும் அசவுகரியமாக்க நாங்கள் விரும்பவில்லை. அவர் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவது ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News