இரண்டாவது டெஸ்ட்: கான்பூர் சென்றடைந்த இந்திய அணி வீரர்கள்!

Updated: Tue, Sep 24 2024 22:51 IST
Image Source: Google

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. 

இப்போட்டியில் இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் எதிவரும் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் நடைபெறவுளது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலோ அல்லது போட்டியை டிராவில் முடித்தாலும் கூட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தும். அதேசமயம் வங்கதேச அணியானது தொடர் இழப்பை தடுப்பதற்காக கடுமையாக போராடும் என்பதல் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக தற்சமயம் இவ்விரு அணிகளும் தீவிரமான பயிற்சியிலும் ஈடுபட்டுவருகின்றன.

மேலும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் முதல் டெஸ்ட்டில் விளையாடிய அனைத்து வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் இன்று கான்பூர் சென்றடைந்தனர். மேலும் விமான நிலையத்தில் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாளை முதல் இந்திய வீரர்கள் போட்டி நடைபெறும் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தங்கள் பயிற்சிகளை தொடங்குவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.

Also Read: Funding To Save Test Cricket

வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஸாத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹாசன், மோமினுல் ஹேக், முஸ்ஃபிக்கூர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன் மிராஸ், ஜேக்கர் அலி, தஸ்கின் அகமது, ஹசன் மஹ்முத், நஹித் ராணா, தைஜுல் இஸ்லாம், மஹ்முதுல் ஹாசன் ஜாய், நயீம் ஹசன், காலித் அகமது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை