இலங்கை அணிக்கு எதிராக புதிய வரலாறு படைக்கவுள்ள இந்திய அணி!

Updated: Thu, Aug 01 2024 22:55 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணியானது 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இலங்கை  - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

மேலும் கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரு இந்திய அணிக்காக மீண்டும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இப்போட்டியில் ஒருவேளை இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றையையும் படைக்கவுள்ளது. 

அதன்படி நாளைய போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தினால், கிரிக்கெட் வரலாற்றில் ஒரு எதிரணிக்கு எதிராக 100 ஒருநாள் வெற்றிகளைப் பதிவு செய்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையைப் படைக்கும். இதுவரை இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 168 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நிலையில் அதில் 99 வெற்றிகளையும், 57 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதேசமயம் 12 போட்டிகள் முடிவில்லாமலும், டிராவிலும் முடிவடைந்துள்ளது.

இந்த பட்டியலில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா இதுவரை 142 போட்டிகளில் விளையாடி 96 வெற்றிகளுடன் 100 வெற்றி இலக்கை நெருங்கி வருகிறது. பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக 157 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 93 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய 88 வெற்றிகளை குவித்து நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. 

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த அணிகள்

  • 99 வெற்றிகள் - இந்தியா vs இலங்கை
  • 96 வெற்றிகள் - ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து
  • 93 வெற்றிகள் - பாகிஸ்தான் vs இலங்கை
  • 88 வெற்றி - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
  • 84 வெற்றிகள் - ஆஸ்திரேலியா vs இந்தியா

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஸர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்கா (கே), பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனாகே, நிஷான் மதுஷ்க, வனிந்து ஹஸரங்கா, துனித் வெல்லலாகே, சாமிக்க கருணாரத்ன, அகிலா தனஞ்செயா, மொகம்து ஷிராஸ், மஹீஸ் தீக்ஷனா, அசித்த ஃபெர்னாண்டோ, இஷான் மலிங்கா.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர் அட்டவணை

  • முதல் ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 02 - கொழும்பு
  • இரண்டாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 04 - கொழும்பு
  • மூன்றாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 07 - கொழும்பு
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை