மழையால் கவிடப்பட்டது பாகிஸ்தான் - நியூசிலாந்து ஆட்டம்!
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகாள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரானது இன்று (ஏப்ரல் 18) முதல் தொடங்கிவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற இருந்தது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டத்தின் டாஸ் நிகழ்வு தாமதமானது.
அதன்பின் மழை நின்ற பின் தொடங்கப்பட்ட ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் டஸ் நிகழ்வு முடிந்த சில நிமிடங்களிலேயே மீண்டும் மழைப்பெய்ய தொடங்கியது. இதனால் இப்போட்டி நடைபெறும் என்ற கேள்வி எழுந்த நிலையில், ஒருவழியாக மழை நின்று, டக்வொர்த் லுயிஸ் முறைப்படி இப்போட்டி 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - டிம் ராபின்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி முதல் ஓவரை வீசினார். அதன்படி இந்த இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே டிம் ராபின்சன் ரன்கள் ஏதுமின்றி ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடைடைக் கட்டினார்.
இதையடுத்து மார்க் சாப்மேன் களமிறங்க வந்த சமயத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் மேற்கொண்டு ஆட்டத்தை நடத்தமுடியாது என்பதால் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஏப்ரல் 20ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது.