நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும், அதனைத்தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 09 முதல் 13ஆம் தேதிவரை நொய்டாவில் நடைபெறவுள்ளது.

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் அணியில் டாம் லேதம் துணைக்கேப்டனாக மீண்டும் செயல்படவுள்ளார். மேற்கொண்டு வில்லியம் ஓ ரூர்க் மற்றும் பென் சீயர்ஸ் ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடம் காயம் காரணமாக நீண்ட காலமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். 

Advertisement

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் 20 பேர் கொண்ட உத்தேச ஆஃப்கானிஸ்தான் அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதில் அணியின் நட்சத்திர வீரரான ரஷித் கானிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான 16 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.  

அதன்படி, ஹஸ்மதுல்லா ஷாஹித் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் மூன்று அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ரியாஸ் ஹசன், ஷம்ஸ் உர் ரஹ்மான்ன், கலீல் அஹ்மத் ஆகியோர் டெஸ்ட் அணியில் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  மேலும், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, குல்பதின் நைப், ரியாஸ் ஹசன், நவீத் ஸத்ரான் உள்ளிட்ட வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, அப்துல் மாலிக், ரியாஸ் ஹசன், அப்சர் ஸசாய், இக்ராம் அலிகில், பஹீர் ஷா மஹ்பூப், ஷாஹிதுல்லா கமால், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஷம்ஸ் உர் ரஹ்மான், ஜியா உர் ரஹ்மான் அக்பர், ஜாஹிர் கான் பக்தீன், கைஸ் அஹ்மத், கலீல் அஹ்மத், நிஜாத் மசூத்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

நியூசிலாந்து டெஸ்ட் அணி: டிம் சௌதீ (கே), டாம் பிளென்டல், மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டாம் லேதம், டேரில் மிட்செல், வில்லியம் ஓ ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News