United States vs Canada Dream11 Prediction Match 1, ICC T20 World Cup 2024: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதுமட்டுமின்றி எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நாளை தொடங்கும் முதல் லீக் போட்டியில் குரூப் ஏ குழுவில் இடம்பிடித்துள்ள தொடரை நடத்தும் அமெரிக்க அணியும், கனடா அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும் இரு அணிகளும் பங்கேற்கும் முதல் டி20 உலகக்கோப்பை தொடர் இதுவென்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று வரலாறு படைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

USA vs CAN Match Details

  • மோதும் அணிகள் - அமெரிக்கா vs கனடா
  • இடம் - கிராண்ட் ப்ரேரி மைதானம், டல்லாஸ்
  • நேரம் - காலை 6 மணி (இந்திய நேரப்படி)

USA vs CAN: Pitch Report

Advertisement

கிராண்ட் ப்ரேரி மைதானமானது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக அறியப்படுகிறது. இதன் காரணமாக இங்கு இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் மைதானம் மிகவும் மெதுவானதாக இருக்கும் என்பதால் இங்கு பெரிதளவில் ஸ்கோரை எதிர்பார்க்கமுடியாது. இதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் சேஸிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

USA vs CAN: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 07
  • அமெரிக்கா - 05
  • கனடா - 02
  • முடிவில்லை - 00

USA vs CAN: Live Streaming Details

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

United States vs Canada Predicted Teams

அமரிக்கா: ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரீஸ் கஸ், ஆரோன் ஜோன்ஸ், கஜானந்த் சிங், மோனாங்க் படேல் (கே), கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஷாட்லி வான் ஷால்க்விக், ஜஸ்தீப் சிங், சவுரப் நேத்ரவல்கர், அலி கான்

கனடா: நவ்நீத் தலிவால், ஆரோன் ஜான்சன், ஸ்ரீமந்தா விஜயரத்னே, பர்கத் சிங், ஹர்ஷ் தாக்கர், தில்ப்ரீத் சிங் பஜ்வா, நிக்கோலஸ் கிர்டன், சாத் பின் ஸாஃபர் (கே), ரிஷிவ் ராகவ் ஜோஷி, தில்லன் ஹெய்லிகர், கலீம் சனா.

USA vs CAN Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: மோனாங்க் படேல்
  • பேட்டர்ஸ்: நவ்நீத் தலிவால், ஆரோன் ஜோன்ஸ், ஆரோன் ஜான்சன், நிக்கோலஸ் கிர்டன்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஷாட்லி வான் ஷால்க்விக், கோரி ஆண்டர்சன், ஸ்டீவன் டெய்லர் (கேப்டன்), சாத் ஜாபர், தில்லன் ஹெய்லிகர் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: சவுரப் நேத்ரவல்கர்

United States vs Canada Fantasy Tips, USA vs CAN: Dream11 Team, United States vs Canada: Predicted XIs, USA vs CAN: Pitch Report, USA vs CAN: Live Streaming Details, USA vs CAN: Head-to-Head, USA vs CAN: Dream11 Prediction match 1 ICC T20 World Cup 2024

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News