முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் வருண் ஆரோன்!

Updated: Fri, Feb 16 2024 16:17 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுபவர் வருண் ஆரோன். இவர் இந்திய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமாகி 9 டெஸ்ட், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் இதுவரை 52 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

தற்போது 34 வயதாகும் வருண் ஆரோன் நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியுடன் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக வருண் அரோன் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நான் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். வேகப்பந்து வீச்சால் எனக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டன. இப்போது சிகப்பு-பந்து கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சின் தேவைகளை என் உடலால் பூர்த்தி செய்ய முடியாது, அதனால் நான் அதை விட்டு விலக முடிவு செய்துள்ளேன்.

எனது குடும்பத்தினர் மற்றும் ஜாம்ஷெட்பூர் மக்கள் முன்னிலையில் இது எனது கடைசி ஆட்டமாக இருக்கலாம், ஏனென்றால் நாங்கள் இங்கு பெரும்பாலும் வெள்ளை பந்து விளையாட்டுகளை விளையாடுவதில்லை. நான் இங்கே எனது வாழ்க்கையைத் தொடங்கினேன், எனவே இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது” என்று தெரிவித்துள்ளார். 

மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசும் வருண் ஆரோன், அடுத்தடுத்து சந்தித்த காயங்கள் காரணமாக கடந்த 2014அம் ஆண்டு முதல் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். அதன்பின் உள்ளூர் போட்டிகளில் விளையாடிவந்த நிலையிலும் அவர் காயங்களைச் சந்தித்தார். இதனால் மொத்தம் 65 முதல் தர போட்டிகளி விளையாடியுள்ள வருண் ஆரோன் 168 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை தொடரில் எலைட் குரூப் ஏ போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் அணி 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் வருண் ஆரோன் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை