இந்திய கிரிக்கெட்டில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவுக்காக டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என்று அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை படைத்தவர். அதுமட்டுமல்லாமல் 5 ஐபிஎல் கோப்பை, சாம்பியன்ஸ் லீக் என்று சென்னை அணிக்காகவும் கேப்டனாக சாதித்து காட்டியுள்ளார். சென்னை அணிக்காக 14 சீசன்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தோனி, தமிழ்நாட்டின் தத்துப் பிள்ளையாக மாறிவிட்டார்.

Advertisement

எப்போதெல்லாம் தோனி சென்னை வருகிறாரோ, அப்போதெல்லாம் ரசிகர்களுக்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். ரசிகர்களிடையே தோனியின் மாஸ் குறையாததால், அவரின் விளம்பர வருவாயும் உச்சத்திலேயே இருந்து வருகிறது. கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துகளை தோனி சேர்த்து வைத்துள்ளதாக பல்வேறு நிறுவனங்கள் கணக்கிட்டுள்ளன. 

Advertisement

அதுமட்டுமல்லாமல் விவசாயம், முதலீடுகள், விளையாட்டு அணிகள், சினிமா என்றும் தோனி பல்வேறு துறைகளில் கால்பதித்து வருகிறார். அதேபோல் கிரிக்கெட் விளையாடுவதில் தோனி எவ்வளவு ஆர்வம் காட்டுவாரோ, அதே அளவிற்கு இருசக்கர வாகனங்கள் மீது பிரியம் கொண்டவர். இதனை தோனி பல்வேறு முறை வெளிப்படுத்தியுள்ளார். உலகின் முன்னணி இரு சக்கர வாகனங்களை வாங்கி தனது வீட்டில் வைத்துள்ளார். அந்த வாகனங்களின் புகைப்படங்கள் திடீரென சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், தோனியுடன் அவரது பைக் ஷெட்டில் எடுத்துள்ள காணொளியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில் சுமார் 100க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 10க்கும் அதிகமான கார்களும் நிற்கின்றன. இதனை பார்த்து வெங்கடேஷ் பிரசாத் மட்டுமல்லாமல் அவரது நண்பர்களும் வியந்துபோகியுள்ளனர். ராஞ்சியில் உள்ள வீட்டில் இவ்வளவு பைக்குகளையும் தோனி பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.

 

இந்த பைக்குகள் பற்றி தோனி கூறுகையில், குடும்பத்தினர் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான ஷெட்டை வீட்டின் அருகே அமைக்க ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் வேறு வழியின்றி வீட்டில் இருந்து சிறிது தூரம் தள்ளியே ஷெட்டை அமைத்தோம். இந்த ஷெட் அருகில் பேட்மிண்டன் கோர்ட் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News