லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதனத்தில் நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Advertisement

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 85 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஜித்தேஷ் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதானைகளைப் படைத்துள்ளார். 

உலகில் முதல் கிரிக்கெட் வீரர்

அதன்படி விராட் கோலி இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 9ஆயிரம் ரன்களைக் குவித்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதன்படி ஆர்சிபி அணிக்காக இதுவரை 271 இன்னிங்ஸ்களில் விளையாடிவுள்ள அவர் 9ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளார். இந்தப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரோஹித் சர்மா 6ஆயிரம் ரன்களைக் கடந்து இரண்டாம் இடத்தில் உள்ளார். 

ஒரு அணிக்காக அதிக ரன்கள் (டி20 கிரிக்கெட்)

  • 9000* - விராட் கோலி (ஆர்சிபி)
  • 6060 - ரோஹித் சர்மா (எம்ஐ)
  • 5934 - ஜேம்ஸ் வின்ஸ் (ஹாம்ப்ஷயர்)
  • 5529 - சுரேஷ் ரெய்னா (சிஎஸ்கே)
  • 5314 - எம்எஸ் தோனி (சிஎஸ்கே)

ஐபிஎல்லில் அதிக அரை சதங்கள்

இதுதவிரித்து ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் அரைசதம் கடந்ததன் மூலம் இத்தொடரில் தனது 63ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து இந்த சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி இருவரும் கூட்டாக 62 அரைசதங்களைப் பதிவுசெய்து இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் அதிக அரைசதங்கள்

  • 63* - விராட் கோலி
  • 62 - டேவிட் வார்னர்
  • 51 - ஷிகர் தவான்
  • 46 - ரோஹித் சர்மா
  • 40 - கேஎல் ராகுல்
  • 40 - ஏபி டி வில்லியர்ஸ்

ஏபி டி வில்லியர்ஸை முந்தினார்

இதுதவிர்த்து ஐபிஎல் தொட்ரில்  150 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக ஏபி டி வில்லியர்ஸ் 33 முறை இதனை செய்திருந்த நிலையில் தற்போது விராட் கோலி 34ஆவது முறையாக இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த பட்டியலில் டேவிட் வார்னர் 35 முறை இதனைச் செய்து முதலிடத்தில் உள்ளார்.

Also Read: LIVE Cricket Score

மேற்கொண்டு டி20 வரலாற்றில் 10000 அல்லது அதற்கு மேற்பட்ட பந்துகளை எதிர்கொண்ட மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். முன்னதாக, இந்த டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர். மேலும் இவர்கள் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News