சமகால கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் விராட் கோலி. இவர் இந்திய அணிக்காக 102 டெஸ்ட், 262 ஒருநாள் மற்றும் 107 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் மொத்தம் 24,078 ரன்கள் எடுத்துள்ளார். 71 சதம் மற்றும் 125 அரை சதங்களை அவர் பதிவு செய்துள்ளார். 

Advertisement

மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரராகவும் போற்றப்பட்டு வருகிறார். அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் சாதனை தடங்களாக அவருக்கு அமைந்துள்ளன. இந்நிலையில், ஹைதராபாத் நகரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் கோலி, 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்தார். 

Advertisement

அதன் மூலம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள டிராவிட், சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்த ரன்களை காட்டிலும் கூடுதலாக 14 ரன்கள் எடுத்துள்ளார் கோலி. டிராவிட் மொத்தம் 404 போட்டிகளில் விளையாடி 24,064 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது அதனை முந்தி விராட் கோலி புதிய சாதனைப் படைத்துள்ளார்

இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்கள்

  •     சச்சின் டெண்டுல்கர் - 34,357 ரன்கள் - 664 போட்டிகள்
  •     விராட் கோலி - 24,078 ரன்கள் - 471 போட்டிகள்
  •     ராகுல் திராவிட் - 24,064 ரன்கள் - 404 போட்டிகள்
  •     சவுரவ் கங்குலி - 18,433 ரன்கள் - 421 போட்டிகள்
  •     எம்.எஸ்.தோனி - 17,092 ரன்கள் - 535 போட்டிகள்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News