ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸை எதிர்த்து நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தியது. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் பிராண்டன் கிங் 23 ரன்கள் சேர்த்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து ஜான்சன் சார்லஸ் 38 ரன்களிலும், கேப்டன் ரோவ்மன் பாவெல் 5 சிக்ஸர்களுடன் 36 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 36 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸலும் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

Advertisement

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து கடின இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் பில் சால்ட் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் பேட்டிங்கின் போது இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஆண்ட்ரே ரஸல் வீசினார். 

 

அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட பில் சால்ட், பந்துவீச்சாளரின் தலைக்கு மேல் இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு மிரட்டினார். அந்த பந்தானது மையானத்திற்கு வெளியே சென்றதுடன் 100 மீட்டர் தூரத்திற்கும் சென்றுள்ளது. இந்நிலையில் ஆண்ட்ரே ரஸல் பந்துவீச்சில் பில் சால்ட் மைதானத்திற்கு வெளியே சிக்ஸரை விளாசி மிரளவைத்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News