ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் அபினவ் மனோகர் ஒரு அற்புதமான கேட்ச்சை பிடித்து அசத்தியுள்ளார். 

Advertisement

அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னிங்ஸின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் சிமர்ஜீத் சிங் இரண்டாவது ஓவரை வீசினார். அப்போது அந்த ஓவரை எதிர்கொண்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆஃப் சைடில் ஒரு கட் ஷாட்டை விளையாட முயன்று பந்தை தூக்கி அடித்தார். அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த அபினவ் மனோகர் அபாரமான தாவியதுடன் கேட்ச் பிடித்தும் அசத்தினார். 

இதனால் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பாட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இந்நிலையில் அபினேஷ் மனோகர் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போட்டி குறித்து பேசியனால் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 24 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த டிராவிஸ் ஹெட் - இஷான் கிஷன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிதீஷ் ரெட்டி 30 ரன்னிலும், ஹென்ரிச் கிளாசென் 34 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷன் 45 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் 11 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களைச் சேர்த்தது. ராயல்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் மற்றும் நிதீஷ் ரானா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்துள்ள சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரெல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News